கொழும்பு தனியார் வைத்தியசாலையில் கைக்குண்டை வைத்தவர் சிக்கினார்

கொழும்பு, நாரஹேன்பிடவில் அமைந்துள்ள பிரபல தனியார் வைத்தியசாலையின் கழிவறையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட கைக்குண்டை அங்கு வைத்தவர் பொலிஸாரின் விசாரணையில் சிக்கியுள்ளார்.

அதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த இரு சந்தேக நபர்களில்  ஒருவரே ககைக்குண்டை வைத்தியசாலையின் கழிவறையில் வைத்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைக்குண்டை அங்கு வைத்த சந்தேகநபரே அது குறித்து வைத்தியசாலைக்கும் தகவல் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர், வைத்தியசாலை நிர்வாகத்திடம் இருந்து பணப்பரிசை பெற்றுக் கொள்வதற்காகவே இவ்வாறு செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.