பட்டதாரி பயிலுனர்களுக்கு எதிர்வரும் மூன்று மாதங்களில் நிரந்தர நியமனம்.

பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள  53,000 பட்டதாரிகள் எதிர்வரும் மூன்று மாதங்களில் அரச நிறுவனங்களில் நிரந்தரமாக இணைக்கப்படவுள்ளனர்.

அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும இதனை தெரிவித்துள்ளார்.

நேற்று  நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பட்டதாரிகளுக்கு விரைவில் தொழில் வழங்குவதற்கான பொறுப்பினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சில அமைச்சர்களிடம் வழங்கியுள்ளார்.

இதன்படி, தற்போது பயிலுனர்களாகவுள்ள 53,000 பட்டதாரிகளும் எதிர்வரும் மூன்று மதங்களுக்குள் அரச நிறுவனங்களில் நிரந்தரமாக இணக்கப்படுவார்கள்.

பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள பட்டதாரிகளின்  20 ஆயிரம் ரூபா மாதாந்த கொடுப்பனவில் ஏதேனும் பிரச்சினை இருப்பின் அதனை கண்டறிந்து உரியவர்களுக்கு நிலுவை தொகையும் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.