ஓட்டமாவடியில் 2525 முஸ்லிம்களின் ஜனாஸாக்களும் 304 ஏனைய இனத்தவர்களின் உடல்களும் நல்லடக்கம்

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்யும் ஓட்டமாவடி – மஜ்மா நகர் மையவாடியில் இன, மத பேதமின்றி அனைத்து இன மக்களையும் மிகவும் கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்யும் பணிகள் இடம்பெற்று வருவதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.

இவ்வருடம் மார்ச் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இப்பணியில்  இம்மாதம் செவ்வாய்க்கிழமை 14 ஆம் திகதி வரை அங்கு 2829 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

அந்தவகையில், 2525 முஸ்லிம்களின் உடல்களும், 159 இந்துக்களின்  உடல்களும், 93 பௌத்தர்களின் உடல்களும், 52 கிறிஸ்தவர்களின் உடல்களும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன என்று தவிசாளர் தெரிவித்தார்.