வாழை தோட்டத்திற்குள் கஞ்சா செடி வளர்த்தவர் கைது!

வாழை தோட்டத்திற்குள் கஞ்சா செடிகளை பயிரிட்ட நபர் ஒருவரை கொட்டாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த கைதுச் சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது.

கொட்டாவை, ஹொரஹேன பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் விளையாட்டுத்துறை அமைச்சில் பணியாற்றி ஓய்வுபெற்ற எழுதுவிளைஞர் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த நபர் இவ்வாறு கஞ்சா செடிகளை வளர்த்துவந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது இவரால் வளர்க்கப்பட்ட நான்கு கஞ்சா செடிகளை கண்டுபிடித்துள்ளதாவும், குறித்த சந்தேகநபரை இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.