குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்கள் திறப்பு

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்கள் நாளை முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் மாத்தறை, கண்டி, குருநாகல் மற்றும் வவுனியா ஆகிய கிளை அலுவலகங்களே இவ்வாறு திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிராந்திய அலுவலகங்களினால் மேற்கொள்ளப்படும் வழமையான சேவைகள் நடைபெறும் எனவும்  கடவுச்சீட்டுக்களை ஒருநாள் சேவையின் கீழ் பெற விரும்புவோர் தலைமை அலுவலகத்தில் அதனை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.