கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றிலிருந்து கைக்குண்டு மீட்பு

கொழும்பு – நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

குறித்த வைத்தியசாலையின் முதலாம் மாடியிலுள்ள கழிப்பறை ஒன்றிலிருந்தே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட கைக்குண்டை பாதுகாப்பாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாவும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும்  தெரிவித்துள்ளார்.