தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஜயந்த கெட்டகொடவின் பெயர் பரிந்துரைப்பு

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு  ஜயந்த கெடகொடவின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட ஆவணம்  தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசத்தினால் இன்று பிற்பகல் தேர்தல் ஆணைக்குழுவில் குறித்த ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டது.

அஜித் நிவாட் கப்ரால் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து  விலகியதையடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொடவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா கருத்துவெளியிடும்போது, எதிர்வரும் வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணைக்குழு கூடி ஆராய்ந்ததன் பின்னர், ஜயந்த கெட்டகொடவை நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுமென தெரிவித்தார்.