மன்னார் பிரதேச சபை தவிசாளர் ஷாஹுல் ஹமீட் முஜாஹிர் பதவி நீக்கம்

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் ஷாஹுல் ஹமீட் முஜாஹிர் தவிசாளர் பதவியிலிருந்தும், சபை அங்கத்தவர் பதவியிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

தவிசாளர் ஊழல்  மற்றும் அதிகார துஷ்பிரயோகம் புரிந்துள்ளதாக ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், குறித்த குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக ஆளுநரால் ஓய்வுபெற்ற நீதி அரசர் கந்தையா அரியநாயகம் தலைமையிலான தனிநபர் விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

குறித்த விசாரணைகுழு அதன் அறிக்கையை கடந்த 2 ஆம் திகதி ஆளுநரிடம் கையளித்திருந்தது.

குறித்த அறிக்கையின்படி தவிசாளருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸினால் தவிசாளர் பதிவியிலிருந்தும், சபை அங்கத்தவர் பதவியிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.