கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி

கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கை நாட்டில் தற்போது குறைந்து வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.

நேற்று தம்புத்தேகமவில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் கருவுறுதல் பிரச்சினை ஏற்படும் என்ற சந்தேகம் இளைய சமுதாயத்தினரின் மத்தியில் நிலவிவருவதே இதற்கான காரணமெனவும் அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் உலக நாடுகளின் ஆராட்சியில்  இவ்விடயம் உறுதிப்படுத்தவில்லை. இதனால்  இளைஞர் யுவதிகள் அச்சமின்றி தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.