ஒற்றுமை மற்றும் சக வாழ்விலேயே எதிர்காலம் தங்கியுள்ளது : பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

ஒற்றுமை மற்றும் சக வாழ்விலேயே ஒரு தேசத்தின் எதிர்காலம் தங்கியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜி 20 சர்வமத மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மஹிந்த ராஜகக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக இலக்குகளை அடையும் போது எமது எதிர்காலம் ஒற்றுமை மற்றும் சகவாழ்விலேயே பெரும்பாலும் தங்கியுள்ளது என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இத்தாலி, போலோக்னா நகரில் நடைபெற்றுவரும் ஜி20 சர்வமத மாநாட்டின் முதலாம் அமர்வில் கலந்து கொண்டு உரைநிகழ்த்தும்போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.

ஜி20 அரச தலைவர்களின் மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 மற்றும் 31 ஆகிய தினங்களில் ரோமில் நடைபெறவுள்ள நிலையில் அதனை முன்னிட்டு சர்வமத மாநாடு தற்போது இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.