பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக ஆராயும் குழுவின் அறிக்கை

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக ஆராயும் குழுவின் அறிக்கை எதிர்வரும் 17ம் திகதி கொவிட் தொற்று பரவலை தடுக்கும் ஜனாதிபதி செயலணியிடம் கையளிக்கப்படவுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் இந்தக் குழு கூடி விரிவாக ஆராய்ந்து குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சிறுவர் நோயியல் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள், கல்வி அதிகாரிகள், குடும்ப சுகாதார அதிகாரிகள், தொற்றுநோய் தடுப்பு நிபுணர்கள் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கப் பிரதிநிதிகளும் இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.