சிறுவர்களுக்கான தடுப்பூசியை மூன்று கட்டங்களாக வழங்க திட்டம்

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு  மூன்று கட்டங்களாக தடுப்பூசி வழங்கலை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக சிறுவர் நோய் நிபுணர்களின் நிறுவனம் அறிவித்துள்ளது.

குறித்த நிறுவனதின் உறுப்பினரான வைத்தியர் ஆர்.எம்.சுரன்ன பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

நாள்பட்ட நோய்கள் உடைய சிறுவர்களுக்கு  முதற்கட்டமாக தடுப்பூசி வழங்கப்படுமெனவும் இம்மாதம் இறுதி வாரத்திலிருந்து சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கல் திட்டம் ஆரம்பிக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சிறுவர்களுக்கு பைஃசர் தடுப்பூசியை மாத்திரம் வழங்க தீர்மானித்துள்ளதாக வைத்திய நிபுணர் ஆர் .எம். சுரன்ன பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.