யாழ் மருத்துவ பீட மாணவி ஒருவர் சடலமாக மீட்பு

பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழ். பல்கலைகழக  மருத்துவ பீடத்தை சேர்ந்த சாருகா என்ற முதலாமாண்டு மாணவியே நேற்று மாலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அதிகமான கற்றல் சுமை காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் மரணத்துக்கான உறுதியான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

யாழ். சுன்னாகத்தினைச் சேர்ந்த இம்மாணவி உடுவில் மகளிர் கல்லூரியில் முதன்மையான மாணவியாக திகழ்ந்துள்ளார் என அறியமுடிகிறது.

குறித்த கல்லூரியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மருத்துவத் துறைக்குத் தெரிவாகி கல்லூரிக்கு பெருமை சேர்த்தவர் எனவும் அண்மையில் வெளியாகிய பல்கலைக்கழக பரீட்சை முடிவுகளிலும் சிறந்த புள்ளிகளைப் பெற்றிருந்தார் எனவும் அவருக்கு நெருக்கமான மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

மாணவியின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.