சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலை.

சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளதாக லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களில் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்ட பின்னர் சந்தையில் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து ஊடகமொன்று  லாஃப் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டப்ளியூ.கே.எச்.வேகப்பிடிவை தொடர்பு கொண்டு கேட்டபோது அதற்கு பதிலளித்த அவர்,

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அத்துடன் உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக நாட்டில் எரிவாயுவிற்கான விலையை அதிகரிக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தற்போது எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதற்கு காரணம், எரிவாயுயை பெற்றுக் கொள்வதற்கான கடன் கடிதங்களை வணிக வங்கிகள் வழங்கவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.