கிழக்கின் சிறகுகள் அமைப்பினரால் மட்டு, தளவாயில் வறிய குடும்பங்களுக்கு நிவாரன பொருட்கள் வழங்கிவைப்பு

கிழக்கின் சிறகுகள் அமைப்பினரால் மட்டக்களப்பு, தளவாய் கிராமத்தில் உள்ள 20 வறிய குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

எங்கள் மக்கள் கனடா அமைப்பின் நிதி அனுசரணையில் தலா 1500 ரூபா பெறுமதியான 20 நிவாரணப் பொதிகள் தெரிவுசெய்யப்பட்ட வறிய குடும்பங்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில், சமூக ஆர்வலரும் அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய செ.குமரன் மற்றும் தளவாய் கிராம மீனவர் சங்க தலைவர் சி.சிவராசா ஆகியோர் கலந்துகொண்டு குறித்த நிவாரணப் பொதிகளை உரிய குடும்பங்களுக்கு வழங்கிவைத்தனர்.

இதேவேளை,  திருப்பெரும்துறை, புதூர், கல்லடி ஆகிய பகுதிகளில் மேலும் 20 குடும்பங்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கும் நிவாரணப்பொதிகள் நேற்று வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இதில் கிழக்கின் சிறகுகள் அமைப்பின் நிர்வாக உறுப்பினர் ரவி கிருஷ்ணா கலந்துகொண்டு நிவாரண பொதிகளை வழங்கிவைத்தார்.

கோவிட் பரவுகை காரணமாக நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலுள்ள இந்நேரத்தில் வறிய குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிழக்கின் சிறகுகள் அமைப்பினரால் நிவாரணப் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.