திருகோணமலையில் ஊரடங்கு நேரத்திலும் மதுபோதையில் அட்டகாசம்

(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குடபட்ட
துவரங்காடு மற்றும் அலஸ் தோட்டம் பகுதிகளில் வீதியில் மதுபோதையில்  அட்டகாசம் செய்து வருவதாக தெரியவருகின்றது.

நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாசகம் எடுப்பவர்கள் இரவு நேரங்களில் வீதிகளில் நடமாடி வருவதாகவும் மது அருந்திவிட்டு அட்டகாசம் செய்து வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

குறிப்பாக யாசகர்கள் உண்பதற்கு உணவின்றி பகல் நேரங்களில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற காலப்பகுதியில் திருகோணமலை பொது வைத்தியசாலை,காளி கோவில்,பிரதான பஸ் தரிப்பிடம் போன்ற இடங்களில் நின்று கொண்டு யாசகம் பெற்று இரவு நேரங்களில் துவரங்காடு மற்றும் அலஸ் தோட்டம் போன்ற பகுதிகளில் மது அருந்திவிட்டு அட்டகாசம் செய்து வருவதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இதை நேரம் நேற்றிரவு (10)  திருகோணமலை நிலாவெளி பிரதான வீதி துவரங்காடு சாரதிகள் மதுபோதையில் வாகனங்களை செல்ல விடாமல் நடுவீதியில் நின்று கொண்டு அட்டகாசம் செய்ததையும் எம்மால் அவதானிக்க கூடியதாக இருந்தது.

இவ்வாறு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மதுபானம் எவ்வாறு இவர்களுக்கு கிடைக்கின்றது என்றும் அத்தியாவசிய தேவைக்காக வெளியில் செல்லும் பொதுமக்களை வீடுகளுக்கு திருப்பியனுப்பியும் கைது செய்தும்  வரும் நிலையில் இவ்வாறு நடு வீதியில் குடிபோதையில் அட்டகாசம் செய்யும் நபர்களை இனங்கண்டு நடவடிக்கை எடுக்குமாறும் பொதுமக்கள் உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.