மீன்கள் பதப்படுத்தப்பட்ட ஐஸ் கழிவுகள் குடியிருப்பு பகுதியில் கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு

(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)

திருகோணமலை பொது மீன் சந்தையில் மீன் பதப்படுத்தப்பட்ட ஐஸ் கழிவுகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளில்  கொட்டப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்

திருகோணமலை மட்க்கோ  பிரதேசத்தில் மீன்களை பதப்படுத்தும் ஐஸ் கழிவுகள் கொட்டப்படுவதால் அப்பிரதேசத்தில் சூழல் மாசடைந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கொட்டப்படும் ஐஸ் கழிவுகள் திருகோணமலை மொத்த மீன் சந்தையில் வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்களை பதப்படுத்த பயன்படுத்தப்படும் ஐஸ் கழிவுகள் எனவும் அவ்வாறு பயன்படுத்தப்பட்ட ஐஸ் கழிவுகள் இவ்வாறு மக்கள் குடியிருக்கும் பங்குகளில் கொட்டப்படுவதால் அப்பிரதேசத்தில் ஒரு வகை துர்நாற்றம் வீச படுவதாகவும் வீதியால் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கொட்டப்படும் ஐஸ் கழிவுகளினால் கொசுக்களின் பெருக்கம் அதிகரித்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
இவ்வாறு கொட்டப்படும் ஐஸ் கழிவுகள் இரவு வேளைகளில் வாகனங்களில் கொண்டு வந்து கொட்டப்படுவதாகவும் சிறுவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் வயோதிபர்கள் என அனைவரும் பெரும் அசௌகரியங்களை முகம் கொடுப்பதாகவும் தெரிவிக்கின்றனர்
இதுதொடர்பாக உரிய அதிகாரிகள் இவ்வாறு கொட்டப்படும் ஐஸ் கழிவுகளை இப்பிரதேசத்தில் கொட்டவிடாமல் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றனர்.