அநாவசியமாக பயணிப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் : P.H.I சங்கம்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் வீதிகளில் அநாவசியமாக பயணிப்போரை கட்டுப்படுத்த பொலிசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அழுலிலுள்ள  ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை  நீடிப்பு செய்யப்பட்டுள்ளமை குறித்து கருத்து வெளியிடும்போதே அச்சங்கத்தின்  தலைவர் உபுல் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அவசியமற்ற முறையில் பயணிப்பதற்கு அதிகாரிகள் அனுமதிப்பார்களாயின், இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதால் எந்தவித பயனுமில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.