எம்.ஏ.றமீஸ்)
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமையப் பெற்றுள்ள கோணாவத்தை ஆற்றில் உள்ள மீன்கள் கடந்த இரண்டு தினங்களாக திடீரென இறந்து மிதந்து வருவதால் தாம் மிகுந்த அச்சம் கொள்வதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாற்றின் மூலம் பல்லாயிரக் கணக்கான நெல் விவசாயச் செய்கை இடம்பெற்று வருவதோடு, இவ்வாற்றில் மீனவத் தொழிலில் ஈடுபட்டு வரும் பல நூற்றுக்கணக்கானோரின் வாழ்வாதார தளமாகவும் அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆறு இருந்து வருகின்றது.
இவ்வாற்றில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சிறியளவிலான சிறு தொகை மீன்கள் இறந்து மிதந்து காணப்பட்டதுடன், படிப்படியாக மீன்கள் இறப்பு வீதம் அதிகரித்து தற்போது பல்லாயிரக் கணக்கான மீனினங்கள் இறந்து கரையொதுங்கி காணப்படுகின்றன. இதனால் இப்பிரதேசத்தில் துர்நாற்றம் வீசி வருவதோடு, இப்பிரதேச மக்களின் இயல்பு வாழ்விலும் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் நிலவி வரும் வரட்சியுடனான காலை நிலை காரணமாக இவ்வாற்றுப் பகுதியில் உவர் தன்மை ஏற்பட்டமை மீனினங்கள் இறப்பதற்கு காரணமாக இருக்கக் கூடும் எனவும், ஆற்று நீரில் ஏதேனும் இரசாயனப் பதார்த்தங்கள் சேர்ந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழக்காரணமாவும் அமையலாம் என பிரதேச மக்களும் துறைசார்ந்தோரும் தெரிவிக்கின்றனர்.
இது போன்று இதற்கு முன்னர் இவ்வாறாக பெருந் தொகையான மீனினங்கள் இவ்வாற்றில் இறந்து கரையொதுங்கவில்லை எனவும் இவ்வாறு பல்வேறு இன மீன்கள் இறந்து கரையொதுங்குவதானது இதுவே முதற்தடவை எனவும் இவ்விடயம் தமக்கு மிகுந்த அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் கரையோர பிரதேச மக்களும் மீனவர்களும் தெரிவிக்கின்றனர்.