அரசாங்கம் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிய கடிதம் உண்மைக்கு புறம்பானது

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அசினால் அண்மையில் அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கையில், உண்மைக்கு புறம்பான தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, உண்மையான தகவல்களை உள்ளடக்கிய கடிதமொன்றை மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகருக்கு தாம் அனுப்பியவைத்துள்ளதாகவும் அச்செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில் 14 ஆயிரம் பேர் மாத்திரமே இறந்தார்கள் என்பது உள்ளிட்ட உண்மைக்கு புறம்பான பல தகவல்கள் அரசாங்கத்தின் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக  நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதாக மேலும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.