மட்டு மாநகர சபையினால் தகனசாலை

மட்டக்களப்பு மாநகரசபையினால் தகனங்களை எரியூட்டுவதற்காக கள்ளியங்காட்டில் இரண்டரைக்கோடி ரூபா செலவில்  தகனசாலை அமைக்கப்படவுள்ளதாகவும் இதற்கான விலைமனு இன்றுகோரப்படவுள்ளதாக மட்டு மாநகரசபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவான் தெரிவித்தார்.

தகனசாலை அமைக்கும் முயற்சியில் தான் 2019முதல் ஈடுபட்டு அன்றைய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரெத்தின இது விடயத்திற்கு 40மில்லியன் ஒதுக்கி இருந்ததாகவும் ஆட்சிமாற்றம் காரணமாக இப்பணம் கிடைக்கவில்லையெனவும் தெரிவித்தார்.
இருந்தபோதும் மாநகரசபையின் வரவுசெலவுத்திட்டத்தில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு கட்டட  திணைக்களத்திடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டு விலைமனு கோரஇருந்த நிலையில் சில நிருவாகச்சிக்கல் காரணமாக கைவிடப்பட்டிருந்தது.
இருந்தும் இதற்கான அனைத்து வேலைத்திட்டங்களும் முடிவடைந்து தகனசாலை அமைப்பதற்கான ஒப்பந்தக்காரரை தெரிவு செய்வதற்கான விலைமனு கோரப்படவுள்ளது.
இத்துடன் மாநகரசபையின் நிதிமூலம் ஒருதகனசாலையும் பொது அமைப்புக்கள் ஒத்துழைக்கும் பட்சத்தில் இன்னுமொரு தகனசாலையும் அமைக்கமுடியுமெனவும் தெரிவித்தார்.