20 வயது இளைஞன் மர்மமான முறையில் சடலமாக மீட்பு

(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்) திருகோணமலை-தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மர்மமான முறையில் இளைஞரொருவர் இன்று (08) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் முள்ளிப்பொத்தானை- சதாம் நகர் பகுதியைச் சேர்ந்த அலிபுல்லாஹ் அர்ஸான் (20வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது வீட்டில் இருந்த இளைஞரை காணவில்லை என தேடியபோது தொங்கிய நிலையில் இருந்ததாகவும் பின்னர் உறவினர்கள் தொங்கிக் கிடக்கும் இளைஞரை கீழே இறக்கிய போது உயிரிழந்து இருந்ததாகவும் ஆரம்ப விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த சடலம் சம்பவ இடத்தில் சடலம் இருப்பதுடன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகள் இடம் பெற்ற உடன் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் மரணத்திற்கான காரணம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.