மட்டக்களப்பில் பிரபல தமிழ் ஆசிரியர் கொரோனாவிற்கு பலி!!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

வாழைச்சேனையை பிறப்பிடமாகவும் நொச்சிமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல தமிழ் ஆசிரியரான ஆரியநந்தா என்பவர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளார்.
கடந்த 1969.03.14 வாழைச்சேனையில் பிறந்த இவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிட்சை பெற்று வந்த நிலையில்  07.09.2021 நேற்று சிகிட்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
இறுதியாக இவர் காக்தான்குடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.