நிந்தவூர் பல்கலைக்கழக மாணவர்கள் சமூக சேவைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டினால் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குரிய முக்கிய பாடங்களை நிகழ்நிலை ஊடாக இலவசமாக கற்பிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை தொகுதி முக்கியஸ்தரும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை பணிப்பாளர் சபை உறுப்பினருமான றிஸ்லி முஸ்தபா அவர்களின் அனுசரணையில் “றிஸ்லி முஸ்தபா கல்வி நிதியம்” திட்டம் மூலமாக இவ் இலவச நகழ்நிலை கல்வித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின்போது நிந்தவூர் பல்கலைக்கழக மாணவர்கள் சமூக சேவைகள் ஒன்றியத்திற்கு டெப் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிராந்திய முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.