நேற்று 3 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

அரசின் கொவிட் தடுப்பூசி செலுத்தும் செயற்திட்டத்தின் கீழ் 3 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றய தினம் (06) 320,283 பேருக்கு முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, சைனோபாம் முதலாவது தடுப்பூசி 88,441 பேருக்கும் இரண்டாவது தடுப்பூசியை 200,961 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், அஸ்ட்ராசெனகா முதலாவது தடுப்பூசி 3,417 பேருக்கும் இரண்டாவது தடுப்பூசி 272 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பைஸர் முதலாவது தடுப்பூசியை 1,326 பேரும் இரண்டாவது தடுப்பூசி  24,550 பேரும் பெற்றுக்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.