கிழக்கில் டெல்டாஅதிகரிப்பு?

கிழக்கு மாகாணத்தில்  கொவிட்டெல்டா பிறள்வின் தாக்கம் அதிகரித்துள்ளதாக மாகாணத்தகவல்கள் தெரிவிக்கின்றன.அண்மையில் மாகாணத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது மட்டுமல்லாமல்  ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 317பேர் மரணமடைந்துள்ளதுடன்,21800மேற்பட்டோர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை கிழக்கு மாணத்திலிருந்து ஆய்வுக்காக சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்ட  தொற்றுக்குள்ளானவர்களின் 100 மாதிரிகளில் பெரும்பாலானோருக்கு டெல்டா தொற்றும், மிகச்சிறியஅளவினருக்கே அல்பா தொற்றும் கண்டறிப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பிட்ட ஆய்வுக்காக  மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 49 மாதிரிகள் அனுப்பபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.