நான் ஒரு தமிழ் முஸ்லிம்

நான் ஒரு தமிழ் முஸ்லிம் பல தடவைகள் தாக்கப்பட்டு, கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டேன் இதனால் தலைமறைவாகி அகதி அந்தஸ்து பெற 2011 ல் நியூசிலாந்துக்கு வந்தேன் என நியுசிலாந்தில் தாக்குதலில் ஈடுபட்டவேளை சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கை மட்டக்களப்பு காத்தான்குடியைச்சேர்ந்த அகமட் ஆதில் முகமட் சம்சுடீன் வயது (32) அகதி அந்தஸ்து கோரியபோது தெரிவித்துள்ளதாக நியுசிலாந்து ஊடகங்கள் செய்தி வெயிட்டுள்ளது.

இது பற்றி தெரியவருவதாவது

சூப்பர் மார்க்கெட் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான நபரை நாடு கடத்த அரசு நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக முயற்சித்தது.

ஆனால் அவரது அகதி அந்தஸ்தை பறிப்பதற்கான பலமுறை முயற்சிகள் இறுதியில் தோல்வியுற்றன.இதுஏமாற்றமளிக்கும் செயல்முறை எனநாட்டின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.

குடிவரவு அதிகாரிகள் அவரது அகதி அந்தஸ்தை ரத்து செய்ய முயன்றுள்ளனர் ஏனெனில் அது மோசடியாக பெறப்பட்டது என்று நம்பப்பட்டுள்ளது.

சம்சுதீன் ஒரு தமிழ் முஸ்லிம். அவர் இலங்கையை விட்டு வெளியேறி 2011 இல் மாணவர் விசாவில் நியூசிலாந்திற்கு வந்தார்.

அவரும் அவரது தந்தையும் அரசியல் அதிகாரிகளின் அரசியல் பின்னணி காரணமாக இலங்கை அதிகாரிகளுடன் கடுமையான பிரச்சினைகளை அனுபவித்ததாகக் கூறி அவர் அகதி அந்தஸ்தை நாடினார்.

அவரது ஆரம்ப விண்ணப்பம் 2012 இல் நிராகரிக்கப்பட்டது ஏனெனில் குடிவரவு நியூசிலாந்து அவரது கூற்றுக்கு நம்பகத்தன்மை இல்லை என்று கண்டறிந்தது.

பின் மேல்முறையீடு செய்யப்பட்டபோது சம்சுதீன் டிசம்பர் 2013 இல் குடிவரவு மற்றும் பாதுகாப்பு நீதிமன்றினால் அகதியாக அங்கீகரிக்கப்பட்டார்.

ஆனால் மே 2018 இல் அதிகாரிகள் அவரது அகதி அந்தஸ்தை ரத்து செய்ய விரும்புவதாக அவருக்கு அறிவிக்கப்பட்டு அதாவது அவர் நாடு கடத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டது.

இதனால் அவர் மீண்டும் மேன்முறையீடு செய்தார்.

நீதிமன்றத்தில் ஆஜராகிய சம்சுதீன் “நான் இலங்கைக்கு திரும்புவதில் மிகவும் பயப்படுகிறேன்இ ஏனென்றால் அங்குள்ள அதிகாரிகளுக்கு நான் பயப்படுகிறேன்இ நான் எனது நாட்டை விட்டு வெளியேறியபோது இருந்த அதே அபாயங்கள் மற்றும் அச்சங்கள் இன்னும் இலங்கையில் உள்ளன.

“மேலும் தமிழ் இளைஞர்கள் அதிகாரிகளிடமிருந்து இலங்கையில் பல கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். நாங்கள் விடுதலைப்புலிகள் என நினைத்து அதிகாரிகளால் எப்பொழுதும் சந்தேகத்தின்பேரில் எம்மைப்பார்ப்பதால் கைது தடுப்பு தவறான நடத்தைகள் மற்றும் சித்திரவதைகளை எதிர்கொள்கிறோம். என தெரிவித்துள்ளதாகவும் நீதிபதிஒருவரின் பெயரை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை குறிப்பிட்ட நபர் சம்பந்தமான விசாரணைகள் ஆரம்பிக்கப்பிட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.