அம்பாரை மாவட்டத்தில் 94 அறநெறிப் பாடசாலைகளுக்கு திருநீற்றுக் குவளை வழங்கி வைப்பு.

(திருக்கோவில் நிருபர்-எஸ்.கார்த்திகேசு) அம்பாரை மாவட்டத்தில் 94 அறநெறிப் பாடசாலைகளுக்கு திருநீற்றுக் குவளை வழங்கி வைப்பு

அம்பாரை மாவட்டத்தில் இயங்கி வரும் சுமார் 94 அறநெறிப் பாடசாலைகளுக்கு பாரம்பரியமான தேங்காய் சிறட்டையில் செய்யப்பட்ட திருநீற்றுக் குவளைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு அம்பாரை திருக்கோவில் பிரதேசத்தில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் தலைமையில் இன்று மண்டானை பூம்புகார் அறநெறிப்பாடசாலையில் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக இடம்பெற்று இருந்ததுடன்

நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்து கொண்டு திருநீற்றுக் குவளைகளை வழங்கி வைத்திருந்தார்.

இவ் திருநீற்றுக் குவளைகள் திருக்கோவில் பிரதேசத்தில் மண்டானை சந்தோசபுரம் கிராமத்தில் வசித்து வரும் சுயதொழில் முயற்சியாளர் ஒருவரினால் கழிவுப் பொருட்களை மீள்குழச்சி முறையில் பயன்படுத்தும் நோக்குடன் சிறட்டையில் செய்யப்பட்டு இருந்தன.

இவ் செயற்பாடானது இந்து சமய கலாசார பண்பாட்டு விழிமியங்களை தற்கால சமூகத்தினரும் அறிந்து கொள்ளும் நோக்குடன் இவ் சிறட்டையிலான திருநீற்றுக் குவளை அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதன்போது சுயதொழில் முயற்சியாளருக்கு 10ஆயிரம் ரூபா பணமும் வழங்கி வைக்கப்பட்டு இருந்ததுடன் அறnநிறப்பாடசாலைகளுக்கான தமிழர்களின் பாரம்பரிய முறையிலான திருநீற்றுக் குவளைகள் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் மாவட்ட இந்து கலசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ஜெயராஜ் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.