மன்னார் பகுதியில் வெள்ளிக் கிழமை 19 கொரனா தொற்றாளர்கள்

( வாஸ் கூஞ்ஞ)

மன்னார் பகுதியில் வெள்ளிக் கிழமை (03.09.2021) மேலும் 19 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். இத்துடன் மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் 1740 ஆக உயர்ந்துள்ளன.

மன்னார் மாவட்டத்தில் இதுவரையும் மேற்கொள்ளப்பட்ட மொத்தம் 27967 பி.சீ.ஆர் பரிசோதனையில் 1740 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் இதுவரைக்கும் 20 பேர் கொரோனாவினால் இறந்துள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் நாளாந்தம் வெளியிடும் தனநது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்பொழுது மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் சனிக்கிழமை (04.09.2021) பதிவு செய்திருக்கும் தனது அறிக்கையில்

மன்னார் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (03.09.2021) 19 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக இனம் காணப்பட்டுள்ளனர்.

இதில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் 09 நபர்களும், முசலி சுகாதார சேவை அதிகாரி பிரிவில் 02 நபர்களும், கடற்படையினர் 02 நபர்களும். வங்காலை மாவட்ட வைத்தியசாலையில் 03 பேரும். அடம்பன், எருக்கலம்பிட்டி, பேசாலை ஆகிய மாவட்ட வைத்தியசாலைகளில் தலா ஒருவரும் ஆகிய இடங்;களிலேயே இவ் தொற்றாலர்கள் இனம் காணப்பட்டுள்ளனர் எனவும்

இதுவரை மன்னார் மாவட்டத்தில் 27967 பி.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதில் 1740 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறப்பு இற்றைவரை 20 இடம்பெற்றுள்ளதாகவும் இந்த மாதம் (செப்டம்பர்) 207 பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் 56 நபர்கள் கொரோனா தொற்றாளர்களாக இவ் மாதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.