களுவாஞ்சிகுடி பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பல கிராமங்களில் தடுப்பூசிகள் ஏற்றப்படுகின்றது.

(எருவில் துசி) களுவாஞ்சிகுடி பொது சுகாதார வைத்திய அதிகாரி அவர்களின் வழிநடத்தலில் இன்று பல கிராமங்களில் கொவிட் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றும் செயற்பாடு மேற்கொள்ளப்படுகின்றது.

அந்தவகையில் எருவில், களுவாஞ்சிகுடி, போன்ற கிராமங்களில் உள்ள 30வயதுக்கு மேற்பட்ட பொது மக்கள் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளவதில் ஆர்வம் காட்டுவதாக களப்பணியில் உள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர் மேலும் மக்கள் தாமாக சிந்தித்து சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தடுப்பூசியினை பெற்றுக்கொள்வது பொருத்தமுடையதாகும் அதிலும் குறிப்பாக சமூக இடைவெளியை பின்பற்றுவது பொருத்தமுடையதாகும் தாம்முந்திக்கொண்டு தடுப்பூசியினை பெற எத்தனிப்பதனால் சமூக இடைவெளி பாதிப்படையவதன் மூலம் கொரோனா தொற்று ஏற்றபட வாய்புள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் 03, 04ந் திகதிகளில் குருமன்வெளி, கோட்டைக்கல்லாறு, பெரியகல்லாறு போன்ற கிராமங்களில் பாடசாலைகளில் வைத்து 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேற்படி தமுப்பூசிகள் ஏற்றும் பணி 8.30 தொடக்கம் 3.30 மணிவரை நடைபெறும்.