மட்டு படுவான்கரையில் டெல்டா.பிராந்திய சுகாதாரப்பணிமனையில் அல்பா.

மட்டக்களப்பில்  இந்தியாடெல்டா  வீரியன் மற்றும்  பிரித்தானியாஅல்பா வீரியன் வைரஸ் தொற்றுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் தொற்றுக்குள்ளாகி இறந்தவர்களில் அதிவீரியம் கூடிய வைரஸ் மாதிரிகளை கொழும்புக்கு அனுப்பி பெறப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலேயே  தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பழுகாமத்தில்  மரணமடைந்த ஒருவருக்கும் மற்றுமொருநபருக்கும் டெல்டா தொற்றும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப்பணிமனையில் பணிபுரிந்த மற்றுமொரு நபருக்கு அல்பா தொற்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

கடந்த 24 மணித்தியாலத்தில் 274 தொற்றாளர்களும், 10 மரணமும் சம்பவித்துள்ளதுடன் மட்டக்களப்பில் சராசரியாக 300 மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு  வருவதுடன் மொத்தமாக 211பேர் மரணமடைந்துள்ளனர்..