களுவாஞ்சிகுடியில் தொடரும் தொற்றாளர்களின் அதிகரிப்பு.

(எருவில் துசி) களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது அந்த வகையில் 24.08.2021ந்திகதி மேற்கொள்ளப்பட்ட அன்ரியன் பரிசோதனை 124 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்டது இதில் 64 நபர்களுக்கு பிரதேசத்தின் பல கிராமங்களில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும் இன்றைய தகவலின் படி 124 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 54 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.