சமுர்த்தி அருணலு – வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பில் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) 2021 ஆம் ஆண்டில் இரண்டு இலட்சம் சமுர்தி குடும்பங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலும் தெரிவு
செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கிவைக்கும் நிகழ்வுகள் மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்கள் ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

சமுர்த்தி திணைக்களமும் நிதியமைச்சும் இணைந்து மேற்கொள்ளும் சமுர்த்தி அருணலு – வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஊடாக
இரண்டு இலட்சம் சமுர்தி குடும்பங்களை மேம்படுத்தும்
நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களிலும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கும் வேலைத்திட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.ஏ.பாக்கியராசா அவர்களது ஒருங்கிணைப்பில் குறித்த வேலைத்திட்டம் கடந்த (19) திகதி முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டு தொடர்ச்சியாக பயனாளிகளுக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுவருகின்றன.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின்பால் நாட்டை கட்டியெலும்பும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக குறித்த வேலைத்திட்டத்தின் ஊடாக வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் வாழ்வாதார உபகரணங்கள், வங்கிக் கடன்கள், விவசாய உதவிகள் உள்ளிட்ட இயற்கை பசளை நடைமுறை உள்ளீடுகள் போன்ற உதவித்திட்டங்கள் சமூர்த்தி வங்கிகள் மற்றும் பிரதேச செயலகங்கள் ரீதியாக வழங்கி வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.