மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.

(ஏறாவூர் நிருபர்- நாஸர்)
மட்டக்களப்பு மாவட்டத்தில்  செங்கலடி – பதுளை வீதியின் காயாங்குடா சந்தியை அண்மித்த பிரதேசத்தில்                   காட்டுயானை தாக்கியதில் பண்ணையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று  (21.08.2021) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
தம்பானம்வெளி கொடுவாமடு பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய                         தங்கராசா சிறிராஜ ஜெயம் என்பவரே கொல்லப்பட்டவரென அடையாளங்காணப்பட்டுள்ளது.
இவர் துவிச்சக்கரவண்டியில் வந்து பற்றைக்காட்டிற்கருகில் சிறுநீர்கழிக்கச்சென்றவேளையில் அங்கு மறைந்நதிருந்த யானை தாக்கியிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
இவர் வெள்ளிக்கிழமை மாலை வீட்டிலிருந்து புறப்பட்டுச்சென்று                  காயான்குடாவிலுள்ள தனது குடும்ப உறவினரது வீட்டில் தங்கியிருந்துள்ளார். அதையடுத்து  செங்கலடி பகுதியிலுள்ள ஒருவரிடம்  மாடுகளை விற்பனை செய்த பணத்தைப் பெறுவதற்காக                      சனிக்கிழமை அதிகாலைவேளை  செங்கலடி பிரதேசத்தை நோக்கிச்சென்றவேளை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திடீர் மரணவிசாரணையதிகாரி எம்எஸ்எம். நஸிர்                       சம்பவ இடத்திற்கு நேரடியாகச்சென்று பார்வையிட்டு               விசாரணைகளை ஆரம்பித்தார்.                               அதன்பின்னர் பீசீஆர் மற்றும் உடற்கூறு பரிசோதனைகளுக்காக              சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்;பப்பட்டது.
கரடியனாறு பொலிஸார் இச்சம்பவம் குறித்த                   மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.