(எச்.எம்.எம்.பர்ஸான்)
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலய அதிபர் என்.எம்.ஹஸ்ஸாலி இன்று (19) மரணமடைந்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக வாழைச்சேனை ஆதர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான 55 வயதுடைய இவர் கடந்த காலத்தில் அரசியல் செயற்பாட்டளாராக இருந்துள்ளதுடன் பிரதேச கல்வி வளர்ச்சிக்கும் பாரிய பங்காற்றியுள்ளார்.
மரணமடைந்த அதிபர் ஹஸ்ஸாலியின் குடும்பத்தினருக்கு அரசியல்வாதிகள், கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் எனப்பலரும் தங்களது அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.