விதுஷனின் உடலம் கொழும்புக்கு மாற்றம்

(சசி புண்ணியமூர்த்தி)

ஜூன் மாதம்  3ம்  திகதி சந்திரன் விதுஷன் எனும் இளைஞன் ஐஸ் போதை பொருள் வியாபாரம் செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுமார் இரவு 10.45 மணியளவில் கைது செய்யப் பட்ட நிலையில் மறுநாள் காலை சடலமாக மீட்கப் பட்டு இருந்தார் .

குறித்த வழக்கு விசாரணை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதி பதி ஏ,சி ரிஷ்வான் முன்னிலையில் இன்று வழக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது

புதைக்கப்பட்ட விதுஷசனின் உடலை மீண்டும் 21ம் திகதி திங்கள் கிழமை  தோண்டி எடுத்து  இலங்கையிலேயே இத் துறையில் மிகவும் நிபுணத்துவம் வாய்ந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தினுடைய பேராசிரியர் முன்னிலையில் மீளவும் பிண பரிசோதனை  மேற்கொள்ள மாண்புமிகு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது .

அந்த வகையில் தோண்டி எடுக்க பட்ட விதுஷனின் உடலம் அனுராத புரத்திற்கு எடுத்து செல்லப் பட்டு மீண்டும் இன்றைய தினம் உடல் கூற்று பரிசோதனைக்காக கொழும்புக்கு மாற்றபட்டுள்ளதாக அவருடைய தகப்பனார் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 28ம் திகதி மீண்டும் எடுத்துக் கொள்ள படவுள்ளமை குறிப்பிடத்தக்கது