திருகோணமலை நகரம் முற்றாக முடங்கியது.!

(ஹஸ்பர் ஏ ஹலீம்)
கோவிட் 19 தொற்றினை தடுக்கும் வகையில் இன்று (19) திருகோணமலை நகரம் முற்றாக முடங்கியுள்ளது.
திருகோணமலை வர்த்தக சங்கம் மற்றும் வியாபாரிகள் சங்கம் ஆகியவற்றின் வேண்டுகோளுக்கிணங்க மரக்கறி சந்தை , மீன் சந்தை மற்றும் தனியார் கடைகளை இன்று முதல் ஒரு வாரகாலத்துக்கு மூடப்பட்டுள்ளன.
திருகோணமலையில் வேகமாகப் பரவி வரும் கோவிட் 19 தொற்றினை தடுத்து மக்களை பாதுகாக்கும் வகையிலேயே,  மேற்படி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளாகிய மருந்தகங்கள்,  உணவகங்கள் மற்றும் பலசரக்கு கடைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறக்கப்பட்டுள்ளன, ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.