கல்முனையில் கனரக வாகனம் விபத்து வர்த்தக நிலையம் பலத்த சேதம் !

( எம். என். எம். அப்ராஸ்)

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை- அக்கரைப்பற்று பிரதான வீதியில்

பயணித்த கனரகவாகன மொன்று வீதியை  விட்டு விலகி இன்று (17)அதிகாலை விபத்துக்குள்ளாகியது.

கல்முனை முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் அருகாமையில்

இவ் விபத்து இடம்பெற்றது .

கல்முனை பிரதான நகரிலிருந்து திருக்கோவில் பகுதிக்கு சென்று கொண்டிருந்த குறித்த கனரக வாகனம் வீதியை விட்டு விலகியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த  பிரதான வீதியின் அருகில் காணப்பட்ட மின் மற்றும் தொலைத் தொடர்புகம்பத்தில்  கன ரகவாகனம்  மோதி மின் சேதமடைந்ததுடன் மேலும் இதன் அருகில் காணப்பட்ட தனியார் வர்தக நிலையமொன்றில் மோதியதுடன் வர்தக நிலையத்தின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது.

விபத்துக்குள்ளான கனரக வாகனம் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது

  இவ் விபத்து குறித்து கல்முனை பொலிஸார் விசாணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.