கதிரவன்
திருகோணமலை நகைமாளிகை சங்கம் பொது வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கு அமைய 100 படுக்கை விரிப்புகளையும் 500 குடிநீர் போத்தல்களையும் நேற்று திங்கட்கிழமை 2021.08.16 காலை வழங்கி வைத்துள்ளனர்.
அனுமதிக்கப்படும் கொவிற் தொற்றாளர்களுக்கு வழங்குவதற்காக இதனை நாம் வழங்கி வைத்ததாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பொது வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் ஜெகத்விக்கிரமரத்னவிடம் நகைமாளிகை சங்க தலைவர் ரி.எம்.ஹணி வழங்கி வைத்தார்.