கிண்ணியாவில் கார் தலைகீழாய் புரண்டு விபத்து.

ஹஸ்பர் ஏ ஹலீம்_
கிண்ணியா கச்சகோடித்தீவு பொன்னாரந்தீவு பகுதி பிரதான வீதியில் கார் ஒன்று விபத்துக்குள்ளானது.

நேற்று(15) மாலை  தம்பலகாமம் நோக்கி சென்றுகொண்டிருந்த கார் தலைகீழாக புரண்டு இவ்விபத்து
இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த வாகனத்தில் சாரதி மாத்திரமே பயணித்ததாகவும் எவ்வித காயங்களும் இன்று தெய்வாதீனமாக உயிர் தப்பியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதற்கு முன்னர் பல விபத்துக்கள் இவ்விடத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்விடத்தில் சுமார் 27 க்கும் அதிகமான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக அங்குள்ளவர்கள் குறிப்பிடுகின்றனர்.