மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் கொங்கிறீட் வீதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் உள்ள அரச உத்தியோகத்தர்களின் குடியிருப்புக்கான 1 கி.மீ வீதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு  நேற்று (13) வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

குறித்த வீதியானது பல வருட காலமாக கிரவல் வீதியாக காணப்பட்ட நிலையில் குறித்த வீதியால் பயணிப்பதற்கு சிரமம் ஏற்பட்ட நிலையில், குறிப்பிட்டு வீதியை புனரமைத்து தருமாறு பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான சி.சந்திரகாந்தன் அவர்களிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த விதியானது கொங்கிறீட் வீதியாக புணரமைப்பு செய்வதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

குறித்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் உள்ளிட்ட பிரதேச சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அரச திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.