அடையாள அட்டைகளை பெற விண்ணப்பித்தவர்களுக்கு குறிப்பிட்ட திகதிகளில் அடையாள அட்டை.

பத்தரமுல்லஆட்பதிவுத்திணைக்களத்தின்  தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

திணைக்களத்தின் பல அதிகாரிகள் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக  திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலேக தெரிவித்தார்.

கோவிட் சூழ்நிலையால் அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தாலும், அடையாள அட்டைகளை அந்த நாளில் அல்லது அதற்கு முன்னதாக பெற தேதி மற்றும் நேரத்தை ஒதுக்கிய அனைத்து விண்ணப்பதாரர்களின் தனிப்பட்ட முகவரிக்கு அனுப்பப்படும்
அத்துடன்அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் அடையாள அட்டைகள் விரைவாக அனுப்பப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.