37 வது  இராணுவ வீரர்களின் நினைவேந்தலை முன்னிட்டு விசேட அதிரடிப்படையினர் இரத்ததானம் வழங்கல் 

(வவுணதீவு எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு மாவட்டத்தின்  வவுணதீவு விசேட அதிரடிப்படையினர்  37 வது  இராணுவ வீhர்களின் நினைவேந்தலை முன்னிட்டு விசேட அதிரடிப்படையினர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிக்கு  இரத்ததானம் வழங்கும் நிகழ்வு வவுணதீவு  தாண்டியடி விசேட அதிரடிப்படை முகாமில் திங்கட்கிழமை (09) இடம்பெற்றது
இந்த இராணுவ வீர்களின் நினைவேந்தல் எதிர்வரும் முதலாம் திகதி இடம்பெறும் நிலையில் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி சட்டத்தரணியும் பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தரவின்  எண்ணக்கருவுக்கு அமைவாகவும் அம்பாறை கட்டளைத்தளபதி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர். சேனாதீர வழிகாட்டலில்,
மட்டக்களப்பு பிரதேச படையணியின் கட்டனைத் தளபதி உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.சி. வேட்டவிதான ஆலோசனையில் வவுணதீவு விசேட அதிரடி படை முகாம் பொறுப்பதிகாரி  டபிள்யூ. ஜீ, எஸ். ஹயப்பிரிக தலைமையில் இந்த இரத்தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது 50 மேற்பட்ட விசேட அதிரடிப்படையினர்  மற்றும்  உயிரிழந்த படை வீரர்களின் உறவினர்கள் கலந்துகொண்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவின் வைத்தியார் குழவினர்களிடம் இரத்த தானத்தினை  வழங்கினர்.