ஒரேநாளில் அதியுயர் 294தொற்றுக்களை பதிவு செய்த அம்பாறை மாவட்டம்!

(வி.ரி.சகாதேவராஜா)

இலங்கையில் கொவிட் வந்தகாலம் தொடக்கம் இதுவரை ஒரேநாளில் 294 அதியுயர் தொற்றுக்களின் எண்ணிக்கையை அம்பாறை மாவட்டம் நேற்று பதிவுசெய்திருக்கின்றது.


அம்பாறை மாவட்டத்தினுள்வரும் அம்பாறை பிராந்தியத்தில் 227பேரும் கல்முனைப்பிராந்தியத்தில் 67பேரும் தொற்றுக்கிலக்காகியுள்ளனர். கூடவே  இருமரணங்களும் சம்பவித்திருக்கின்றன.