கர்ப்பிணி தாய்மார்களுக்கு போஷாக்கு உணவு பொதிகள் வழங்கிய இராணுவம்

ந.குகதர்சன்

கிழக்கு மாகாண இராணுவக் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரியவின் வழிகாட்டலில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள குழந்தை பெறவுள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு போஷாக்கு உணவு பொதிகள் வழங்கும் வேலைத்திட்டம் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதற்கமைவாக பொலநறுவை மாவட்டத்தின் மன்னம்பிட்டி, வெலிக்கந்தை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நூறு கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசாக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

வாகரை 233 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி வசந்த ஹேவகே தலைமையில் மன்னம்பிட்டி பிரத்தீபா மன்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண இராணுவக் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, 23வது தரைப்படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நலீன் கொஸ்வத்த உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.

இவ்வேலைத் திட்டத்தை இராணுவத்துடன் இணைந்து கொழும்பு ரோயல் கல்லூரி பழைய மாணவர் திலங்க மென்டிஸ், ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரி பழைய மாணவர்கள் அணியின் நண்பர்கள் குழாமினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.