மாமாங்க ஆலய நிருவாகசபையினருக்கு பிணை.

 

நேற்றைய தினம் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இடம்பெற்றபோது அதிகளவான பக்தர்கள் ஒன்றுகூடி தீர்த்தமாடிய தொடர்பாக சுகாதாரப் பரிசோதகரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதிஏ .சி ரிஷ்வான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட குறித்த வழக்கில் மாமாங்கேஸ்வரர் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .

இதன் போது தலா ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாய் அடிப்படையில்5பேருக்கு ம் ஒரு லட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மூர்த்தி தலம் தீர்த்தம் என ஒருங்கே அமையப் பெற்ற புண்ணிபதியான ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தில் கொரோனா காரணமாக 50 பேர் மாத்திரம் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஆலய நிர்வாக சபையாள் மக்களுக்கு தெளிவு படுத்தப் பட்டிருந்தது .

இருந்தபோதும் வெளிவீதியில் பாதுகாப்பு கடமையில் இருந்த பாதுகாப்பு படையினர் மற்றும் சுகாதாரப் பரிசோதகர்களின் அசமந்தப் போக்குக் காரணமாக மக்கள் அதிக அளவு திரண்டு தீர்த்தமாடியமை குறிப்பிடத்தக்கது.