மாமாங்கத்தில் மக்கள் கூடியமை பிரதமரின் ஒருங்கினைப்புச் செயலாளரின் அதிரடி உத்தரவு.

மட்டக்களப்பில் மாமாங்கம் ஆலயத்தில் மத நிகழ்விற்காக பெருந்திரளான மக்கள் திரண்டதை அடுத்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான  நடவடிக்கைகளை பிரதம மந்திரியின் ஒருங்கிணைப்புச்செயலாளர் ஜி. காசிலிங்கம் மேற்கொண்டுள்ளார்.

கொரோனாவுக்கு எதிராக மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்ட நேரத்தில் இந்த சம்பவம் நடந்தது துரதிருஷ்டவசமானது.
இது சம்பந்தமாக  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் பேசியதாகவும், இப்போது விசாரணை நடந்து வருவதாகவும் பிரதம மந்திரியின் ஒருங்கிணைப்புச்செயலாளர் ஜி. காசிலிங்கம் தெரிவித்தார்.