கல்முனை கல்வி மாவட்ட பொறியியலாளர் ஏ.எம். சாஹிர் இலங்கை பொறியியல் சேவை தரம் – 01 ற்கு பதவி உயர்த்தப்பட்டார்.

நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதை சேர்ந்த கல்முனை கல்வி மாவட்ட பொறியியலாளராக பதவிவகிக்கும்  ஆதம்பாவா முஹம்மட் சாஹிர் இலங்கை பொறியியல் சேவை தரம் – 01 ற்கு பதவி உயர்த்தப்பட்டார். பொறியியல் சேவையில் 17 வருட கால அனுபவங்களைக் கொண்ட முதலாம் தர  பட்டயப் பொறியியலாளரான இவர் இலங்கை றுஹுனு பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டப் படிப்பையும், மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் நிர்மாணத்துறை சார்ந்த சட்டத்துறையில் முதுமாணிப் பட்டத்தையும் , ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக் கழகத்தில் நிர்வாக பட்டத்தையும், நிர்வாக முகாமைத்துவத்தில் முதுமாணி பட்டத்தையும்,  பொறியியல் சார்ந்த வேறு சில தொழில்கள் தகமைகளையும் கொண்டவராவார்.

அம்பாறை மாவட்ட கட்டிடங்கள் திணைக்கள பொறியியலாளர் உட்பட பல முக்கிய பதவிகளை வகித்த அவர் தற்போது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு செயலாளராகவும், பிரதேசத்தின் முக்கிய இன்னும் பல சமூக சேவை நிறுவனங்களிலும் முக்கிய உறுப்பினராகவும் உள்ளார்