ஜனநாயக இடதுசாரி முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக றாஸிக் றியாஸ்தீன்

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக றாஸிக் றியாஸ்தீன் உத்தியோகபூர்வமாக  ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நீர்வழங்கல் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைப்பாளர் நியமனக் கடிதம் நீர்வழங்கல் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சரத் ரணசிங்க அவர்களினால் நீர் வழங்கல் அமைச்சின் தலைமைக்காரியாலயத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தேசிய அமைப்பாளர் தம்பிக்க பீரிஸ் மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பிரதித் தலைவரும் நீர்வழங்கள் அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான திலகசிரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.அதேவேளை முஸ்லீம் காங்கிரசின் 25 வருடகால செயற்பாட்டாளர் அநுராதபுர சந்தி ஹமீட் அன்ஸாரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியோடு இணைந்து கொண்டார்.
றாஸிக் றியாஸ்தீன் வடமத்திய மாகாண முதலமைச்சர் வேட்டி பிரேமலால் திசாநாயக்க அவர்களின் மக்கள் இணைப்புச் செயலாளராகவும் முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் அவர்களுடைய பிரத்தியேக அரசியல் ஆலோசகராகவும் செயல்பட்டவர்.அதேநேரம் சிங்கள மொழிப் புலமையுள்ள இவர் சிறந்த மேல்மட்ட அரசியல் தொடர்பைக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.