கிண்ணியாவில் கடலில் குளிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

ஹஸ்பர் ஏ ஹலீம்_

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பாலத்திற்கு அருகில் குளிக்கச் சென்ற இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று(07) பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா பைசல் நகர்  தாமரைவில் பகுதியைச் சேர்ந்த மௌஜுத் பர்ஸான் (18 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது மூன்று  இளைஞர்கள் கடல் குளிப்பதற்காக சென்ற போது அதில் ஒருவர் நீந்த  முடியாத நிலையில் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அவரது சடலம் பொதுமக்கள், மற்றும் கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட சடலம் தற்போது கடற்கரையோரத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் திடீர் மரண விசாரனை அதிகாரி  சம்பவ இடத்துக்கு சென்று விசாரனைகளை மேற்கொண்டுள்ளார்.
விசாரணைகள் இடம்பெற்ற பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்